logo

02

E   |   සි   |  

 திகதி: 2011-01-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

0084/2011: Post Offices

0084/ ’10 கெளரவ அஜித் குமார,— தபால், தொலைத்தொடர்புகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) தங்கல்லை பிரதேச செயலாளர் பிரிவினுள் அமைந்துள்ள தபால் அலுவல்கள், உப தபால் அலுவல்கள், முகவர் மற்றும் கிராமிய தபால் அலுவல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும், (ii) இவற்றில் கடிதங்களை விநியோகிக்கும் அலுவலகங்கள் எவை என்பதையும், (iii) மேற்குறிப்பிட்ட அந்தந்த தபால் அலுவலகங்கள் மூலம் சேவை வழங்கப்படும் பிரதேசம், சனத்தொகை மற்றும் கடந்த வருடத்தினுள் வருடாந்தம் உழைத்துள்ள அலகுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும் அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா? (ஆ) (i) மேற்குறிப்பிட்ட தபால் அலுவலக அதிகாரப் பிரதேசத்துக்குள் வரும் வலயங்களின் எண்ணிக்கை, உரிய தபாற்காரர்கள் மற்றும் தந்தி ஏவலாளர்களின் எண்ணிக்கை மற்றும் 2009.06.30 ஆம் திகதிக்கு அந்த பதவிகளுக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும், (ii) அந்தவெற்றிடங்கள் ஏற்பட்ட திகதிகள் யாவை என்பதையும், (iii) இறுதியாக வலயங்கள் மீளமைக்கப்பட்ட திகதி என்னவென்பதையும், (iv) மேற்குறித்த பிரதேச செயலாளர் அதிகாரப் பிரதேசத்தில் தபால் வசதிகள் வழங்கப்படாத கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் கிராமங்கள் எவை? (v) அவற்றுக்கு தபால் வசதிகள் வழங்கப்படும் கால வரையறை என்னவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2011-01-04

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks