04

E   |   සි   |  

 திகதி: 2014-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

4280/2014: இலஞ்சம் அல்லது ஊழல்கள் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு: அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு எதிரான முறைப்பாடுகள்

4280/ ’13

கௌரவ துனேஷ் கன்கந்த,— பிரதம அமைச்சரும், பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2005 நவம்பர் 19ஆந் திகதி தொடக்கம் 2013 ஜூன் மாதம் 30 ஆந் திகதி வரையிலான காலப்பகுதியினுள் அமைச்சர்களுக்கு (அமைச்சரவை அந்தஸ்துள்ள மற்றும் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத) பிரதி அமைச்சர்களுக்கு, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல்கள் தொடர்பான சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களின், பிரதி அமைச்சர்களின் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் யாவை;

(iii) மேற்படி ஒவ்வொரு அமைச்சருக்கு, பிரதி அமைச்சருக்கு மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெவ்வேறாக யாவை

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்கூறிய முறைப்பாடுகள் தொடர்பாக மேற்படி ஆணைக்குழுவின் மூலம் புலனாய்வுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) புலனாய்வுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக மேற்கொண்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வெவ்வேறாக யாவை;

(iii) இதுவரை புலனாய்வுகள் பூர்த்தி செய்யப்படாத முறைப்பாடுகள் தொடர்பாக துரிதமாகவும் முறைசார்ந்த விதத்திலும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;

(iv) இதற்கு எவ்வளவு காலம் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-03-20

கேட்டவர்

கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-20

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks