logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-06-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

0057/2010: Damaged Roads

0057/ ’10

கெளரவ சஜித் பிரேமதாச,—  நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    இற்றைக்கு ஒரு வருடத்திற்கு முன்னர், கொங்கிறீட் இடப்பட்டு செப்பனிடப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹர பிரதேச செயலாளர் பிரிவின் பராக்கிரமபுர கிராம உத்தியோகத்தர் பிரிவின் கு.க. 03 அல்லகல புகுமுக வீதியின் 200 மீற்றர் தற்போது கொங்கிறீட் கழன்று வெடிப்புக்குள்ளாகி, பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) அவ்வீதியை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதையும்,

(ii) நிர்மாணிப்புக்காக நிதி விடுவிக்கும் போது உரிய நியமனங்களுக்கமைய பணிகள் நிறைவு செய்யப்பட்டமைக்கான விதப்புரைகள் தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்,

(iii) அவ்வீதியை நிர்மாணிப்பதற்கான பணக் கொடுப்பனவுகளின் போது வேறு எந்த நிறுவனங்களிடமிருந்து விதப்புரைகள் பெறப்பட்டுள்ளன என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) அவ்வீதியை நிர்மாணிப்பது குறித்து முறையான விசாரணையொன்றை நடத்துவதற்கும் அவ்வீதியை சீரான நிலைக்கு கொண்டுவருவதற்கும் அவர் நடவடிக்கை எடுப்பாரா?

(ஈ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-06-08

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks