பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
4159/ ’13
கௌரவ துனேஷ் கங்கந்த,— பிரதம அமைச்சரும் புத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2013ஆம் ஆண்டில் மஹபொல புலமைப் பரிசில் நிதியத்திலிருந்து பயன்பெறும் பல்கலைக்கழக மாணவ மாணவியரின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) தற்போது பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த மஹபொல புலமைப் பரிசில் தவணைப் பணத்தின் பெறுமதி எவ்வளவு என்பதையும்;
(iii) ஆறு ஆண்டுகளுக்கும் அதிக காலமாக அதிகரிக்கப்படாதுள்ள தற்போதைய மாதாந்த புலமைப்பரிசில் தவணைப் பணத் தொகை நிலவுகின்ற பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளுக்கு ஒப்பீட்டளவில் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லையென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், தற்போதைய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மற்றும் புலமைப் பரிசில் தவணைப் பணம் அதிகரிக்கப்படாத காலப்பகுதி ஆகிய விடயங்களைக் கவனத்தில் கொண்டு குறித்த கொடுப்பனவை குறைந்தபட்சம் ரூபா ஐயாயிரம் (ரூ.5000/=) வரை அதிகரிப்பது தொடர்பாக கவனம் செலுத்துவாரா என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-12-18
கேட்டவர்
கௌரவ துனேஷ் கங்கந்த, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2013-12-18
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks