01

E   |   සි   |  

 திகதி: 2014-03-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

4153/2014: பாடசாலைச் சீருடைத் துணிகள் இறக்குமதி : விபரம்

4153/ ’13

கௌரவ அனுர திசாநாயக்க,— கல்விச் சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     2012 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளுக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட துணிகளின் அளவு எவ்வளவு;

           (ii)    அதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவு;

(iii) அத் துணிகளை இறக்குமதி செய்த கம்பனி யாது;

(iv) அக் கம்பனியின் ஊடாக மேற்படி சீருடைத் துணிகள் எந்த அடிப்படையில் இறக்குமதி செய்யப்பட்டன

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) 2012 ஆம் ஆண்டுக்கு சீருடை வழங்குவதற்காக கேள்விப் பத்திரங்களை சமர்ப்பித்த கம்பனிகள் மற்றும் விலைகள் யாவை;

(ii) மேற்படி கம்பனிகளில் குறைந்த விலைக் கேள்வியை சமர்ப்பித்த கம்பனியா தெரிவுசெய்யப்பட்டது;

(iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;

(iv) குறைந்த விலைக் கேள்வியை சமர்ப்பித்த கம்பனியினால் சமர்ப்பிக்கப்பட்ட துணிகளில் காணப்பட்ட குறைபாடுகள் யாவை;

(v) தெரிவுசெய்யப்பட்ட கம்பனி சமர்ப்பித்த சீருடைத் துணிகளிலும் மேற்கூறிய குறைபாடுகளைப் போன்றே மேலும் பல குறைபாடுகளும் இருந்தன என்பதை  ஏற்றுக்கொள்வாரா

என்பதை அவர் இச் சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன் ?

கேட்கப்பட்ட திகதி

2014-03-06

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

கல்விச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-04-25

பதில் அளித்தார்

கௌரவ துமிந்த திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks