01

E   |   සි   |  

 திகதி: 2014-02-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

3928/2014: முகத்துவாரம், இப்பகெவத்த பகுதி : புதிய மலசலகூடத்தொகுதி

3928/ ’13

கெளரவ சுஜீவ சேனசிங்க,— பிரதம அமைச்சரும், பௌத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     கொழும்பு நகரத்தை அழகுபடுத்துவதும், அபிவிருத்தி செய்தலும்  நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஒரு நோக்கமாகுமெனக் கூறப்பட்டபோதிலும், கொழும்பு 15, முகத்துவாரம், இப்பகெவத்த என அழைக்கப்படுகின்ற இடம் இன்னமுமே மிகவும் அசுத்தமாகக் காணப்படுகின்றது என்பதையும்;

(ii) அவ்விடத்தில் உள்ள முற்றாகவே சீர்குலைந்துள்ள பொது மலசலகூடத்தொகுதி சுற்றுச்சூழலுக்கு துர்நாற்றத்தைப் பரப்புகின்ற ஓரிடமாக மாறியுள்ளதென்பதையும்;

(iii) அழிவடைந்துள்ள மலசலகூடங்களிலிருந்து பெருக்கெடுக்கின்ற நோய்க் கிருமிகளுடன் கூடிய நீர் காரணமாக பிரதேசவாசிகள் கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) அப்பிரதேசத்தில் மனித வாழ்க்கைக்கு பொருத்தமான சுற்றாடலை உருவாக்குவதற்கும்;

(ii) அழிவடைந்துள்ள மலசலகூடங்களுக்குப் பதிலாக புதிய மலசலகூடத்தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும்

நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-19

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2014-02-19

பதில் அளித்தார்

கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks