பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3927/ ’13
கெளரவ சுஜீவ சேனசிங்க,— வனசீவராசிகள், வளப் பேணுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 35 கி.மீ. நீளத்தைக் கொண்ட மஹஓயா மற்றும் அரலகங்விலவை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்படுகின்ற பாதையில் சுமார் 15 கி.மீ. மாதுறுஓயா தேசிய வனப்பூங்கா ஊடாக நிர்மாணிக்கப்படுகின்றதென்பதையும்;
(ii) மேற்படி பாதையை நிர்மாணிப்பதன் மூலம் 58,850 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட மேற்குறிப்பிட்ட வனப்பூங்கா இரண்டாக பிளவுபடுமென்பதையும்;
(iii) இந் நிலைமையின் கீழ் மாதுறுஓயா வனப்பூங்காவில் வாழும் சிறுத்தைகள், யானைகள் உள்ளடங்கலாக வன விலங்குகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுமென்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் தேசிய வனப்பூங்காக்களினுள் வீதிகளை நிர்மாணித்தல் சட்ட விரோதச் செயல் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வீதியை நிர்மாணிப்பதன் மூலம் மாதுறுஓயா வனப்பூங்காவிற்கு ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பார என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-01-21
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் வளப் பேணுகை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.
பதில் தேதி
2014-01-21
பதில் அளித்தார்
கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks