04

E   |   සි   |  

 திகதி: 2010-05-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0024/2010: Rural Education Development Academy

0024/ ’10

 

கெளரவ அஜித் குமார,—  கல்வி அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கிலம், தமிழ் மற்றும் ஜப்பான் மொழிகளை கற்பிப்பதற்காக “கிராமிய கல்வி அபிவிருத்தி நிலையம்” எனும்  நிறுவனமொன்று தென் மாகாணம் உட்பட பல மாகாணங்களில்  செயற்பட்டு வருகின்றதென்பதை அவர் அறிவாரா ?

(ஆ) (i) ஆமெனில், மேற்படி பாடசாலைகள் யாவையென்பதையும்,

(ii) மேற்படி கருத்திட்டம் செயற்படுத்தப்படுகின்ற ஏனைய மாகாணங்களும் சம்பந்தப்பட்ட  பாடசாலைகளும் யாவையென்பதையும்,

(iii) அதற்காக கல்வி அமைச்சிலிருந்து அல்லது மாகாண கல்வி அமைச்சுகளிலிருந்து மேற்படி நிறுவனத்துக்கு அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளதா  என்பதையும்,

(iv) அது எப்போது, எவரால், எத்தகைய நிபந்தனைகளின் கீழ் என்பதையும்

அவர்  இச்சபையில் சமர்ப்பிப்பாரா ?

(இ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து பணம் அறவிடப் படுவதாயின் ஒரு மாணவனிடமிருந்து அறவிடப்படும் தொகை எவ்வள வென்பதையும் ,

(ii) கல்வி அமைச்சு அல்லது வேறு அரச நிறுவனமொன்று அதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளதா என்பதையும்

அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா ?

(ஈ) இன்றேல்,  ஏன் ?

 

கேட்கப்பட்ட திகதி

2010-05-18

கேட்டவர்

கௌரவ கௌரவ அஜித் குமார, பா.உ.,, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks