பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3750/ ’13
கௌரவ சுஜீவ சேனசிங்க,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு செலவிடப்பட்ட மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி, மற்றும் நிர்மாணப் பணிகள் முடிவுறுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) திக்ஓவிட்ட மீன்பிடித் துறைமுகத்தில் இயக்கக் கூடிய மீன்பிடிக் கலங்களின் வகைகள் யாவை என்பதையும்;
(ii) இங்கு இயக்கக்கூடிய மேலே குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு கலங்கள் வகையினதும் எண்ணிக்கை தனித்தனியே எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி துறைமுகத்தின் ஊடாக நாளாந்தம் பெற்றுக்கொள்ளப்படும் மீன் உற்பத்தி எவ்வளவென்பதையும்
(iv) தற்போது மேற்படி துறைமுகத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள நேரடி மற்றும் மறைமுகமான தொழில் வாய்ப்புகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி துறைமுகத்தை நிர்மாணிப்பதன் ஊடாக நிறைவேற்றிக்கொள்வதற்கு எதிர்ப்பார்க்கப்பட்ட நோக்கங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி நோக்கங்கள் தற்போது நிறைவேறியுள்ளனவா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-23
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி அர்ஜுன சுஜீவ சேனசிங்ஹ, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
----
பதில் தேதி
2013-11-23
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks