04

E   |   සි   |  

 திகதி: 2010-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0012/2010: North Western Provincial Council

0012/’10

 

கெளரவ ரவி கருணாநாயக்க,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)        1999 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையிலான, வடமேல் மாகாண சபையின்  கணக்கு அறிக்கைகளை அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா ?

(ஆ)   மேற்படி கணக்கு அறிக்கைகளின்  மூலம் வெளிவந்த மோசடிகள் மற்றும் ஊழல்களுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை  மேற்கொள்ளப்பட்டதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா ?

(இ) மேற்படி மோசடிகள் மற்றும் ஊழல்களுடன் சம்பந்தப்பட்ட உத்தியோகத் தர்களுக்கும் ஏனைய நபர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான விரிவான அறிக்கையொன்றை அவர் இச்சபையில்  சமர்ப்பிப்பாரா ?

(ஈ) (i) ஒழுக்காற்று விசாரணையின் முடிவுகளுக்கேற்ப குற்றம்சாட்டப்பட்ட உத்தியோகத்தர்களை சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பதையும்,

(ii) இன்றேல், குற்றம் சாட்டப்பட்ட உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ள அதிகாரிகளுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா ?

(உ) இன்றேல், ஏன் ?

 

கேட்கப்பட்ட திகதி

2010-05-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks