04

E   |   සි   |  

 திகதி: 2010-05-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0009/2010: Forest Resources Management Project

0009/’10

 

கெளரவ ரவி கருணாநாயக்க,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      வன வளங்கள் முகாமைத்துவ கருத்திட்டத்திற்காக எந்த வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து எவ்வளவு கடன் தொகை பெற்றுக் கொள்ளப் பட்டுள்ளது என்பதையும்,

           (ii)    இக்கருத்திட்டத்தின் கீழ் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரைபடத்திற்கு உள்ளடக்கப்படுவதற்காக இலக்கமிடப்பட்டுள்ள காடுகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்,

(iii) வரைபடத்திற்கு உள்ளடக்கப்பட்டுள்ள காணியின் பரப்பளவு எவ்வள வென்பதையும்,

(iv) அதற்கு செலவு செய்யப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் ஆலோசகரர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட பணத்தொகை எவ்வளவு என்பதையும்,

(ii) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்ட வர்கள் யாவரென்பதையும்,

(iii) இந்த வெளிநாட்டு விஜயங்களுக்கு செலவு செய்யப்பட்ட பணத்தொகை எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு குறிப்பிடுவாரா?

(இ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் காடுகளின் எல்லைகளை குறித்துக் காட்டுவதற்காகப் பெறப்பட்ட கொங்கிறீட் தூண்களின் எண்ணிக்கை மற்றும் அதற்காக செலவுசெய்யப்பட்ட பணத்தொகை யாதென்பதையும்,

(ii) எஞ்சியுள்ள தூண்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iii) தேவையான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகுதியாகும் தூண்களின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iv) இந்தக் கருத்திட்டத்தின் வரைபடத்திற்குள்ளாக்கல் மற்றும் பயன்படுத்தப் பட்ட  தூண்களின் பொருட்டு நில அளவைத் தினைக்களத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளதா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-05-18

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks