logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

0007/2010: Sand Reef at Maagama

0007/ ‘10

 

கெளரவ சஜித் பிரேமதாச,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கிரிந்த ஓயா கழி முகத்திலிருந்து தொர ஓயா கழி முகம் வரையுள்ள 396 ஏக்கர் பூராவும் பரந்துள்ள 04.05 கிலோ மீற்றர் நீளமும், 01.05 கிலோ மீற்றர் அகலமும், 30 மீற்றர் உயரமும் கொண்ட மாகம மணல் மேடு பற்றி அவர் அறிவாரா?

(ஆ)    (i)      இந்த மணல் மேட்டின் காரணமாக 676 ஏக்கர் வயலும் 31 ஏக்கர் மேலதிக பயிர்ச்செய்கைக் காணியும் கடலலையிலிருந்து பாதுகாக்கப் படுகின்றதென்பதையும்,

(ii) இந்த மணல் மேடானது தென்னிலங்கைக்குரிய பாலை, வீர, பொன்னாவரசு, போன்ற தாவரங்களை உள்ளடக்கியுள்ளதென்பதையும் அவர் அறிவாரா?

(இ) (i) இந்த மணல் மேடானது, அதிலுள்ள இல்மனைட், கிரனைட் ஆகிய கனியங்களை பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(ii) சுமார் எட்டு அடிக்கு கீழுள்ள இந்த கனியங்களை பெற்றுக்கொள்ளும் பொது நில மட்டத்திலிருந்து மேலுள்ள மணல் மேற்பரப்பில் 60 வீதம் வரை அகற்றப்படுவதால் மாகம மற்றும் அதனை அண்மித்த கிராமங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுமென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஈ) (i) அவ்வாறெனின் அந்த பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னவென்பதையும்,

(ii) இந்த கருத்திட்டத்திற்காக பிரதேச மக்களின் விருப்பத்தைக் கேட்டறிவதை கருத்திட்டக் குழு மேற்கொண்டதா என்பதையும்,

(iii) மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தக் கருத்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருப்பின் அவ்வாறு செய்யப்பட்டது யாருடைய வழிகாட்டலின் கீழ் என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2010-05-19

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks