04

E   |   සි   |  

 திகதி: 2010-05-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

0003/2010: Chena Cultivation at Konketiara

0003/’10

 

கெளரவ சஜித் பிரேமதாச,—  பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)        அம்மாந்தோட்டை மாவட்டத்தில் சூரியவெவ பிரதேச செயலாளர் பிரிவில், சுரிவிருகம கிராமச் சேவகர் பிரிவுக்குட்பட்ட, கோங்கெடிஆர கிராமத்தில் வசிக்கும் மக்களின் பெரும்பாண்மையானோரின் சீவனோபாயம், வருடத்தில் ஒரு முறை மட்டும் செய்யக்கூடிய சேனைப்பயிர்ச் செய்கையாகும் என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) கோங்கெடிஆர கிராமத்தில் அமைந்துள்ள இப்பயிர்ச் செய்கை நிலப்பரப்பினுள் 2009 செப்தெம்பர் மாதத்திலிருந்து சுற்றுப்புற வனங்களிலுள்ள காட்டு யானைகளைக் கொண்டு வந்து மின்வேலி அமைத்து, அடைத்து வைத்துள்ளதன் மூலம், நிர்க்கதியான சுமார் 300 குடும்பங்கள், சுமார் 3000 ஏக்கர் பரப்பளவிலான தமது சேனைப் பயிர்ச்செய்கை காணிகளை இழந்துள்ளனரா என்பதையும்,

(ii) ஆமெனில், பயிர்ச்செய்கை நிலங்களை இழந்து நிர்க்கதிக்குள்ளான சேனைப் பயிர்ச் செய்கையாளர்களின் பயிர்ச் செய்கைக் காணிகளை அவர்களிடம் திருப்பி ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா?

என்பதை அவர் இச்சபையில் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-05-18

கேட்டவர்

கௌரவ சஜித் பிரேமதாச, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks