01

E   |   සි   |  

 திகதி: 2013-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3290/2013: சவூதி அரேபியாவில் சுரேகா த சில்வாவின் மரணம் :நஷ்டஈடு

3290/ ’12

கௌரவ ரஞ்சன் ராமநாயக்க,— வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கொழும்பு மருதானைப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் அதீஸ் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் மூலம் டபிள்யு. எம். சுரேகா த சில்வா எனும் யுவதி வேலைவாய்ப்புக்காக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதையும்;

(ii) அங்கு இவர் மரணமடைந்துள்ளார் என்பதையும்;

(iii) குறித்த  வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக போலி பொலிஸ் அறிக்கைகள் உள்ளிட்ட போலியான தகவல்களை சமா்ப்பித்துள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) போலியான தகவல்களின் மீது மேலே குறிப்பிடப்பட்டுள்ள யுவதியை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக செயலாற்றிய மேற்படி நிறுவனத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) சுரேகா த சில்வா என்பவர் மரணமடைந்ததற்கான காரணம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், குறித்த காரணம் யாது;

(iii) மேற்படி மரணம் தொடர்பிலான மரண பரிசோதனை அறிக்கையை சமா்ப்பிப்பாரா;

(iv) இறந்த யுவதியின் சார்பில் இவரது பெற்றோருக்குக் கிடைக்க வேண்டிய நஷ்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு  நடவடிக்கை  எடுப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-05

கேட்டவர்

கௌரவ ரன்ஜன் ராமநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-11-23

பதில் அளித்தார்

கௌரவ டிலான் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks