04

E   |   සි   |  

 திகதி: 2013-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

3203/2013: பீடைகொல்லிகள் இறக்குமதி : விபரம்

3203/ ’12

கௌரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கைக்கு பீடைகொல்லிகளை இறக்குமதி செய்வதற்காக உரிமப்பத்திரம் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை யாது;

           (ii)    மேற்படி ஒவ்வொரு நிறுவனத்தினாலும் 2005-2012 வரையிலான காலப்பகுதியினுள் இறக்குமதி செய்யப்பட்ட பீடைகொல்லிகளின் (கிருமிநாசினி, களைகொல்லி, பங்கசுகொல்லி) அளவு வெவ்வேறாக யாது;

(iii) மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களில் தற்போது தடை செய்யப்பட்டுள்ளவற்றின்  எண்ணிக்கை யாது

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இறக்குமதி செய்வதற்கு முன்னர் பீடைகொல்லிகளின் தரத்தை பரிசீலிக்கும் செயல்முறையொன்று காணப்படுகின்றதா;

(ii) ஆமெனில், அது யாது;

(iii) இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனப் பொருட்களில் ஆசனிக் மற்றும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் தீங்கு இழைக்கும் ஏனைய மூலக்கூறுகளைக்  கொண்ட பீடைகொல்லிகள் காணப்படுகின்றனவா;

(iv) ஆமெனில், குறித்த தீங்கு இழைக்கும் ஆக்கக்கூறுகளின் உள்ளடக்கத்தை பரிசீலிக்கும் நிறுவனங்கள் யாவை;

(v) குறித்த பரிசீலனைகளுக்கு அரச மருத்துவக் கல்லூரியின் அல்லது சுகாதாரத் திணைக்களத்தின் ஆய்வுகூடங்களின் ஒத்துழைப்பு பெறப்படுகின்றதா;

(vi) ஆமெனில், அந்த நிறுவனங்கள் யாவை;

(vii) மேற்குறிப்பிடப்பட்ட நிறுவனங்களிலிருந்து தரச் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர், பயிர்களுக்கு மேற்படி பீடைகொல்லிகள் விதந்துரைக்கப்படுகின்றனவா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) கமத்தொழில் திணைக்களம்,

(i) விவசாய இரசாயனப் பொருட்கள் தொடர்பில் தலையிடும் விதம் யாது;

(ii) இவற்றின் பாவனை தொடா்பில் விவசாயிகளை விழிப்புணர்வூட்டுவதற்காக நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டம் யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-04-24

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු මහින්ද යාපා අබේවර්ධන මහතා

(மாண்புமிகு  மஹிந்த யாப்பா அபேவர்தன)

(The Hon. Mahinda Yapa Abeywardena)

එම ප්‍රශ්නයට පිළිතුර මා සභාගත* කරනවා. 

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :                                       

* Answer tabled:

 

பதில் தேதி

2013-09-24

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks