01

E   |   සි   |  

 திகதி: 2013-04-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

3137/2013: ஜனாதிபதியின் மன்னிப்பின்கீழ் விடுதலை பெற்ற சிறைக்கைதிகள் : விபரம்

3137/ ’12

கௌரவ அஜித் பி.பெரேரா,— புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    2005  முதல் 2012.06.01 வரையிலான காலகட்டத்தில் அரசியலமைப்பின் 34 ஆம் உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதியினால் வழங்கப்படுகின்ற மன்னிப்பின் கீழ் விடுதலை பெற்றுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த,

(i) சிறைக் கைதிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு கைதியும் “மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட சிறைக் கைதியாக” சிறைச்சாலையில் கழித்துள்ள காலம் எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு சிறைக் கைதியும் விடுதலை செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) அரசியலமைப்பின் 34ஆம் உறுப்புரையின் பிரகாரம் தற்போதைய சனாதிபதியினால் வழங்கப்பட்ட மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டவர்களில் இருந்த,

(i) கொலைக் குற்றவாளிகளாக இருந்தவர்கள் யாவர் என்பதையும்;

(ii) ஹெரொயின் வியாபாரம் சம்பந்தமாகவோ அல்லது தம்வசம் வைத்திருத்தல் சம்பந்தமாகவோ  குற்றவாளிகளாக இருந்தவர்கள் யாவர் என்பதையும்;

(iii) மேற்படி இரு வகைகளையும் சேராதவர்கள் இருப்பின் அத்தகைய சிறைக் கைதிகளின் பெயர்கள் மற்றும்  அவர்கள் புரிந்துள்ள குற்றங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-04-24

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු චන්ද්‍රසිරි ගජදීර මහතා (පුනරුත්ථාපන හා බන්ධනාගාර ප්‍රතිසංස්කරණ  අමාත්‍යතුමා)

(மாண்புமிகு சந்திரசிறி கஜதீர - புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்)

(The Hon. Chandrasiri Gajadeera - Minister of Rehabilitation and Prison Reforms)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, එම ප්‍රශ්නයට  පිළිතුර මා සභාගත* කරනවා.

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)            (i)      (1)      ස්ත්‍රී සිර අංක එල් 13494 මේරි ජුලියට් මොනිකා ප්‍රනාන්දු

(2) සිරකරු අංක එල් 20600 ඇන්ටන් ලින්කන් විජේවර්ධන තෙන්නකෝන්

(ii)  (1)  අංක 1 සිරකාරිය අවුරුදු 03 දින 06යි

   (2)   අංක 2 සිරකරු අවුරුදු 03 දින 23යි

(iii)  (1)  අංක 1 සිරකාරිය 2008.03.08

   (2) අංක 2 සිරකාරිය 2010.08.26

(ආ)  (i) ඉහත සඳහන් දෙදෙනාම පුද්ගල ඝාතනයට වරදකරුවන් වී ඇත.

(ii) නැත

(iii)  නැත

(ඇ)  අදාළ නොවේ.

 

 

பதில் தேதி

2013-04-24

பதில் அளித்தார்

கௌரவ சந்திரசிறி கஜதீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks