04

E   |   සි   |  

 திகதி: 2012-12-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3103/2012: அனுராதபுரம் நகரசபை ஆளுகைப் பிரதேசம் : காணித்துண்டுகள்

3103/ ’12

கெளரவ பி.ஹரிசன்,—  காணி, காணி அபிவிருத்தி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    அனுராதபுரம் நகரசபை ஆளுகைப் பிரதேசத்தில் காணப்படும்,

           (i)      மக்கள் வசிக்கும் காணித் துண்டுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

           (ii)     மேற்படி காணிகளில் அறுதி உறுதிக் காணித் துண்டுகள், குத்தகை காணித் துண்டுகள் மற்றும் அனுமதியற்ற காணித் துண்டுகளின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ள குத்தகை காணிபெறுநர்களுக்கு அறுதி உறுதிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான ஏதேனும் வேலைத்திட்டம்  உள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) அனுராதபுரம் நகரசபை ஆளுகைப் பிரதேசத்தில் வசிக்கும் அனுமதியற்ற குடியிருப்பாளர்கள் அப்புறப்படுத்தப்படுவார்களா என்பதையும்;

(ii) இன்றேல், இவர்களின் வதிவு அதே இடங்களிலேயே சட்டரீதியாக்கப்படுமா என்பதையும்;

(iii) மேற்படி அனுமதியற்ற குடியிருப்பாளர்களிடமிருந்து ஆதன வரி அல்லது வேறேதேனும் வரி அறவிடப்படுமா என்பதையும்;

(iv) மின்சார மற்றும் ஏனைய வசதிகளை வழங்கும் போது இவர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்காக பரிசோதிக்கப்படுமா என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-05

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

காணி, காணி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු සිරිපාල ගමලත් මහතා (ඉඩම් හා ඉඩම් සංවර්ධන නියෝජ්‍ය අමාත්‍යතුමා)

(மாண்புமிகு சிறிபால கமலத் - காணி, காணி அபிவிருத்தி பிரதி அமைச்சர்)

(The Hon. Siripala Gamalath - Deputy Minister of Lands and Land Development)

ගරු කථානායකතුමනි, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන අමාත්‍යතුමා වෙනුවෙන් මා එම ප්‍රශ්නයට පිළිතුරු දෙනවා.

 

(අ)       ඔව්.

               (i)       පදිංචි ඉඩම් කට්ටි සංඛ්‍යාව            -  10,921

              (ii)       සින්නක්කර ඉඩම් කට්ටි සංඛ්‍යාව   -   3,444

                         බදු ඉඩම් කට්ටි සංඛ්‍යාව               -   3,036

                        අනවසර ඉඩම් කට්ටි සංඛ්‍යාව         -   3,967

(ආ) (i) දීර්ඝකාලීන බදුකර මත බදු ගෙවමින් පදිංචිව සිටින බදු ඉඩම්ලාභීන්ට බදුකරය අනුමත වී වසර 5ක් සම්පූර්ණ වූ පසු දීමනා පත්‍ර ලබා දේ.

      (ii) ඔව්. 2013 වසරේ සිට දීමනා පත්‍ර නිකුත් කරන ඉලක්කය වැඩි කිරීම තුළින් මෙම වැඩ පිළිවෙළ කඩිනම් කිරීමට කටයුතු යොදා ඇත.

(ඇ) ඔව්.

  (i) අනවසරකරුවන් නියමානුකූල කිරීම රජයේ ප්‍රතිපත්තිය නොවන නමුත් ඉඩම් නොමැති අයවලුන් ලියාපදිංචි කර ඉඩම් කච්චේරි ක්‍රමය මඟින් සුදුසුකම් පරීක්ෂා කර බලා ඉඩම් ලබා දේ.

 (ii) ඉහත (i) පිළිතුරම අදාළ වේ.

(iii)        වරිපනම් අය කිරීම මෙම අමාත්‍යාංශයට අදාළ නැත. අනවසරකරුවන්ගෙන් බදු මුදල් අය නොකෙරේ.

(iv)       විදුලිය හා වෙනත් පහසුකම් සැපයීම පළාත් පාලන ආයතනවල කාර්යයක් බැවින් මෙම අමාත්‍යාංශයට අදාළ නොවේ.

(ඈ)          අදාළ ‍නොවේ.     

பதில் தேதி

2013-05-08

பதில் அளித்தார்

கௌரவ சிறிபால கமலத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks