01

E   |   සි   |  

 திகதி: 2013-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

3080/2013: இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவை : புதிய சேவைப் பிரமாணம்

3080/ ’12

கௌரவ புத்திக பதிரண,—  சுதேச மருத்துவத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவைக்கென புதிய சேவைப் பிரமாணமொன்று தயாரிக்கப்படுகின்றதா அல்லது தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

           (ii)    அதன் மூலம் ஆயுர்வேத மருத்துவர்கள் குறைத்து மதிப்பிடப்படுவதாக குற்றச்சாட்டொன்று உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(iii) ஆயுர்வேத மருத்துவர்களின் கெளரவத்தை பாதுகாக்கும் விதத்தில் புதிய சேவைப் பிரமாணத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) பாரம்பரிய சுதேச மருத்துவ பரம்பரையினரைப் பேணிக் காப்பதற்கெனக் கூறிக்கொண்டு தகைமைகள் இல்லாத நபர்களுக்கு தனியார் நிறுவனங் களினூடாக சுதேச மருத்துவ டிப்ளோமா வழங்கப்படுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்;

(ii) இது ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகுமென்பதை  ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(iii) அந்த அநீதியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(iv) அவ்வாறாயின், அதற்கான திகதி யாதென்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுதேச மருத்தவத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-11-23

பதில் அளித்தார்

கௌரவ சாலிந்த திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks