பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-11-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

2506/2026: Need of a Economic Center for Puttalam District

2506/2026
கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) புத்தளம் மாவட்டத்தில் அறுவடை முகாமைத்துவத்திற்கான முறையான பொருளாதார மத்திய நிலையமொன்று இன்மையால் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பொருளாதார ரீதியான நட்டம் தொடர்பில் அமைச்சிடம் தரவு அறிக்கைகள் காணப்படுகின்றனவா என்பதையும்;
(ii) பெருமளவில் அறுவடை செய்யப்படும் காலப்பகுதிகளில் இப்பிரதேசங்களில் களஞ்சிய வசதிகள் இன்மையால் உணவு வீண்விரயம் ஏற்படுவதுடன், அது தேசிய உணவுப் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) புத்தளம் மாவட்டத்தை மையமாகக் கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய பொருளாதார மத்திய நிலையமொன்றை நிறுவுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அவ்வாறான பொருளாதார மத்திய நிலையமொன்றின் மூலம் அறுவடை வீண்விரயத்தை குறைப்பதற்கும் மேலதிக அறுவடைகளை பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கும் உள்ள திட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) அத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீட்டின் அளவு வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-11-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) சட்டத்தரணி ஹிருனி விஜேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks