E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

2471/2026: Capacity and condition of Prisons in Sri Lanka

2471/2026
கௌரவ ஆர்.எம்.ரஞ்சித் மத்தும பண்டார,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், தண்டனை அனுபவிக்கும் கைதிகள் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் ஆகியோரின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) கைதிகளின் உணவு, பானங்கள் மற்றும் ஏனைய வசதிகளுக்ககாக நாளொன்றுக்குச் செலவாகின்ற பணத்தொகை யாதென்பதையும்;
(iii) சிறிய குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்குப் பிணை வழங்கும் நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு அல்லது மாற்றுத் தண்டனை முறைகளை அறிமுகப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (ii) சிறைச்சாலைத் திணைக்களத்தில் தற்போதுள்ள பதவி வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு, சேவை வசதிகள் மற்றும் தொழிற் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) கைதிகளின் சுகாதார, துப்புரவேற்பாட்டு மற்றும் போசாக்கு நிலைமையை மேம்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) கைதிகளுக்குப் புனர்வாழ்வளிப்பதற்கும் அவர்களை சமூகமயப்படுத்துவதற்கும் அமுலிலுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-11-05

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks