logo

03

E   |   සි   |  

 திகதி: 2013-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2869/2013: குத்தகை அடிப்படையில் பெற்ற வானூர்திகள் : விபரம்

2869/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— சிவில், விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கெத்தே பசிபிக் நிறுவனத்திடமிருந்து ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வானூர்திகள் தொடர்பாக அவற்றின்,             

           (i)      எண்ணிக்கையையும்;

           (ii)     அவை எவ்வளவு பழைமையானவை என்பதையும்;

(iii) குத்தகைக் காலம் மற்றும் செலுத்தப்பட்ட விலையையும்

அவர் வெவ்வேறாகக் கூறுவாரா?

(ஆ) (i) மேற்சொன்ன கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் தலைவர் சம்பந்தப்பட்டிருந்தாரா என்பதையும்;

(ii) இந்த பல மில்லியன் ரூபா சம்பந்தப்பட்ட இக் கொடுக்கல் வாங்கல் பத்திரிகைகளில் அல்லது இணையத்தளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டதா என்பதையும்;

(iii) போட்டி விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றனவா என்பதையும்

(iv) இக்கொடுக்கல் வாங்கல் கெத்தே பசிபிக் நிறுவனத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததா என்பதையும்

அவர் கூறுவாரா?

(இ) (i) உயர் குத்தகைக் கட்டணத்தினால் ஏற்பட்ட பாரிய நட்டத்தின் காரணமாக கெத்தே பசிபிக் நிறுவனத்துடனான குத்தகை ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கையையும் ;

(ii) மேற்படி  குத்தகையில் உள்நாட்டு முகவர் மற்றும் கெத்தே பசிபிக் நிறுவனத்துக்கான உள்நாட்டு முகவரின் பெயர்களை வெவ்வேறாகவும்;

(iii) மேற்சொன்ன குத்தகை முகவர் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் பணிப்பாளர் ஒருவரின் புதல்வரா என்பதையும்

அவர் கூறுவாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු පියංකර ජයරත්න මහතා (සිවිල් ගුවන් සේවා අමාත්‍යතුමා)

(மாண்புமிகு  பியங்கர ஜயரத்ன - சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்)

(The Hon. Piyankara Jayaratne  - Minister of Civil Aviation)

ගරු කථානායකතුමනි, අප   කැතේ පැසිෆික්  ආයතනයෙන් කිසිම  ගුවන්  යානයක් මිලදී ගෙන නැත.   එම නිසා  ඒ ප්‍රශ්නය   අදාළ නැත.

 

பதில் தேதி

2013-06-19

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks