01

E   |   සි   |  

 திகதி: 2026-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2237/2026: மட்டக்களப்பு முதல் பொத்துவில் வரையான ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள்: அறுவடையைக் கொள்ளையிடல்

.

கேட்கப்பட்ட திகதி

2026-09-24

கேட்டவர்

கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(அ)   (i)        இந்தப் பிரச்சினை எங்களுக்கு நன்றாகத் தெரியும். அங்குள்ள மீனவர்களை எடுத்துக் கொண்டாலும் சரி, எங்களுடைய கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளை எடுத்துக் கொண்டாலும் சரி, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை எடுத்துக்கொண்டாலும் சரி, அனைவருடைய கவனத்துக்கும் இந்த விடயம் கொண்டுவரப்பட்டு இருக்கின்றது. கௌரவ உறுப்பினர் அவர்களே, இவ்வாறான குழுக்களை அல்லது கும்பல்களை இனங்கண்டிருந்தால், இந்த நடவடிக்கை தொடருமாக இருந்தால், புதிய குழுக்கள் உருவாகி இருக்குமாக இருந்தால், அது தொடர்பில் பூரண விபரங்களைத் தருவீர்கள் என்றால், அவற்றை எங்களுடைய பாதுகாப்புப் படையினருக்கு வழங்கி, நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியுமென நான் நினைக்கின் றேன்.

  (ii) கடற்கொள்ளை காரணமாக ஒருசில மீனவர் களுடைய வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப் பட்டு இருக்கின்றது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. இது தொடர்பாக இலங்கை பொலிசாருக்கும் கடற் படையினருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் கூடுதலான கவனத்தைச் செலுத்தும்படி நாங்கள் சொல்லி இருக்கின்றோம். எனவே, நாங்கள் இது தொடர்பில் கூடுதல் கவனத்தைச் செலுத்தி யிருக்கிறோம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்பு கின்றேன்.

(iii)  எங்களுடைய அமைச்சை எடுத்துக் கொண்டா லும் சரி, பாதுகாப்புப் படையினரை எடுத்துக் கொண்டாலும் சரி, அரசாங்கத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, இந்த நிலைமையைத் தடுக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கின்றது. இன்று மீனவர்கள் இந்த நாட்டுக்குக் கூடுதலான வருமானத்தை ஈட்டித் தருகின்றவர்களாக மாறியிருக்கின்றார்கள். எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்றவர்களாக அவர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்தக் கடற் கொள்ளையர்கள் தொடர்பில் மீனவர்கள் தொடர்ந்தும் அச்சப்படத் தேவையில்லை என்றே நாங்கள் நினைக்கின்றோம். ஏனெனில், நாங்கள் அதற்கான பொறிமுறைகளைத் தயாரித்து இருக்கின்றோம். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்ற மீனவர்களுக்கான கூட்டங்களில்கூட, நாங்கள் இது தொடர்பில் மிகவும் தெளிவான முடிவுகளை எடுத்திருக்கின்றோம். ஒன்று, அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற சகல மீனவச் சங்கங்கள், அங்கிருக்கின்ற பொலிசார், கடற்படையினர், ஏனைய பாதுகாப்புத் துறையை சார்ந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு மாதமும் இது தொடர்பில் மீளாய்வொன்றைச் செய்யுமாறு சொல்லியிருக் கிறோம். அதுமாத்திரமல்ல, இந்தப் பிரச்சினை தொடருமாக இருந்தால், உரிய நடவடிக்கை எடுக்கும்படி நாங்கள் கேட்டிருக்கின்றோம். இவ்வாறு நாங்கள் எதிர்வரும் காலங்களில் எங்களுடைய மீனவர்களுக்கு வருகின்ற பாதிப்புகளைத் தடுப்பதற்கு ஏதுவான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருக்கின்றோம் என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகின் றேன்.

(iv) இவ்விடயம் தொடா்பில் நாங்கள் கூடுதலான கவனத்தைச் செலுத்தி இருப்பதுடன்,            வேலைத் திட்டங்களையும் வகுத்திருக் கின்றோம். அதன் ஒரு கட்டமாக, கடற்படை யினரின் ரோந்து நடவடிக்கைகளை விரிவு படுத்தி இருக்கின்றோம். அதுமாத்திரமல்ல, அங்கிருக் கின்ற பொலிஸாரிடம் நாங்கள் இது சம்பந்தமாக ஒரு பொறிமுறையைத் தயாரிக் கும்படி கேட்டிருக்கின்றோம். எங்களுடைய தலைமையின்கீழ் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் மூலம், அந்தப் பகுதியில் இருக்கின்ற பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர், கடற் றொழில் அமைச்சின் அதிகாரிகள், ஏனைய அரச துறைசார்ந்த அதிகாரிகளை ஒன்றிணைத்து, அந்த மாவட்டத்தில் இருக் கின்ற இவ்வாறான பிரச்சினைகளை இணங் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கான பொறிமுறை யொன்றைத் தயாரிக்கும்படி நாங்கள் அறிவுறுத்தி இருக்கின்றோம். அந்தப் பொறிமுறை இன்றைக்கு உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இப்பொழுதுகூட, ஒருசில மாவட்டங்களில் அது வெற்றிகரமாக நடைபெறு கின்றது என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

(v) மேற்குறிப்பிட்டவாறு கடற்றொழிலின்போது படகுகளிலிருந்து வீசப்படுகின்ற வலைகளில் சிக்கியுள்ள மீன்களை ஒருசில குழுவினர் திருடிச் செல்வதானது, தற்போது நடைமுறையிலுள்ள 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க, கடற் றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத் தினாலோ அல்லது அதன்கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளினாலோ உள்ளடக்கப்படும்              ஒரு சூழ்நிலை அல்ல. இது தொடர்பாக தற்போது இலங்கை காவல்துறையினர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது, பொதுச் சட்டத்தின் கீழேயாகும். எனினும், தற்போது திருத்தியமைக்கப்பட்டு வரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தில், இத்தகைய சூழ்நிலைகளின்போது கடற்றொழில் சட்டத்தின் கீழ் செயற்படுவதற்குத் தேவையான ஏற்பாடு களை உள்ளடக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

(vi) நான் முதலில் சொன்னதுபோன்று, கடற்படை யினர், பொலிஸார், எங்களுடைய கடற் றொழில் அமைச்சினதும்  திணைக்களத்தினதும் அதிகாரிகள், அங்கு இருக்கின்ற மீனவச் சங்கத்தினர் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து, அதன் கண்காணிப்புக்கு இவற்றை உட்டுத்தி, கடற்கொள்ளைச் சம்பவங் களைத் தடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பொறிமுறைகளையும் தயாரித்து இருக்கின்றோம். இவற்றின்மூலம் எதிர்வரும் காலங்களில் இந்தக் கடற்கொள்ளையை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்போ மென இந்த இடத்தில் கூறிக் கொள்கின்றேன்.

(vii) கடல் மற்றும் கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் வெறும் கடற்படை ரோந்துப் பணிகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், தொழில்நுட்பக் கண்காணிப்புக் கட்டமைப்புகள், கடற்படைக் கலன்கள்மூலம் மேற்கொள்ளப் படும் ரோந்துப் பணிகள், கடற்கரைக் காலாரோந்துகள், விசேட வாகனங்கள்மூலம் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புகள் மற்றும் ட்ரோன் கலன்கள்மூலம் மேற்கொள்ளப்படும் வான்வழிக் கண்காணிப்பு நடவடிக்கைகள் என்பவற்றை ஒன்றோடொன்று இணைத்து, ஓர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய பன்முகக் கண்காணிப்பு முறைமை யின் மூலம் சந்தேகத்துக்கிடமான செயற் பாடுகளை முன்கூட்டியே கண்டறியவும், அதற்காக உத்தேச உடனடிப் பதிலளிப்புகளை வழங்கவுமுள்ள ஆற்றல் அதிகரித்துள்ளது.

 (ஆ) ஏற்புடையதன்று.

 

கெளரவ சபாநாயகர் அவர்களே, இணைப்பு களுடனான விரிவான விடையை நான் சபாபீடத்துக்குச் *சமர்ப்பிக்கின்றேன்.

பதில் தேதி

2026-09-24

பதில் அளித்தார்

கௌரவ ராமலிங்கம் சந்திரசேகர், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks