E   |   සි   |  

 திகதி: 2026-08-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2188/2026: ‘அபி வெனுவென் அபி’ நிதியம்: விபரம்

2188/2026
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 'அபி வெனுவென் அபி' நிதியம் எச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது என்பதையும், அதன் பிரதான பணிப்பொறுப்புகள் யாவையென்பதையும்;
(ii) மேற்படி நிதியத்தினூடாக வீடமைப்பு உதவியைப் பெறத் தகுதியுடைய ஆயுதப்படை அங்கத்தவர்கள் யாவரென்பதையும்;
(iii) மேற்படி நிதியத்தின் நிருவாக மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உத்தியோகத்தர்கள் யாவரென்பதையும்;
(iv) மேற்படி நிதியத்தின் பிரதான வருமான மூலங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி நிதியத்தின் நிதி மற்றும் நிருவாக நடவடிக்கைகள் அரசிறைக் கொள்கைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதையும், அந்நிதியம் அரசாங்கக் கணக்காய்வுக்குட்படுத்தப்பட வேண்டுமென்பதையும், அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) 2024 ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுகளும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப் பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேற்படி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 'முழுமையான வீடமைப்பு' மற்றும் 'பகுதியளவிலான வீடமைப்பு' கருத்திட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) வீடொன்றைக் கொள்வனவு செய்வதற்கோ, அல்லது நிர்மாணிப்பதற்கோ, வழங்கப்படும் நிதியுதவியின் தொகை எவ்வடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது என்பதையும்;
(iii) இதுவரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு மேற்படி நிதியத்தின் ஊடாக நிதிசார் நிவாரணங்களை வழங்குவதற்கான இயலுமையுள்ளதா என்பதையும்;
(v) இன்றேல், ஏன் என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-19

கேட்டவர்

கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-19

பதில் அளித்தார்

கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks