E   |   සි   |  

 திகதி: 2026-08-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2181/2026: கம்பஹா, கெபெல்லகஹலந்த பொது மயானத்துக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை பலவந்தமாகக் கையகப்படுத்தல்: நடவடிக்கை

2181/2026
கௌரவ சமிந்த லலித் குமார,— பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவின் இலக்கம் 44B, களுஅக்கல கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள கெபெல்லகஹலந்த பொது மயானத்திற்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதி, தனிநபரொருவரினால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) மேற்படி காணியை மீண்டும் பொது மயானத்தின் பயன்பாட்டிற்கு பெற்றுத் தருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பிரதேச மக்களும் பிரதேச செயலாளரும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி பொது மயானத்தை பலவந்தமாக பயன்படுத்துகின்ற ஆட்களிடமிருந்து அவ்வாறு பயன்படுத்திய காலப்பகுதிக்காக ஏதேனும் கட்டணத்தை அறவிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(ii) அரசுக்குச் சொந்தமான காணியொன்றை தனிநபரொருவர் பலவந்தமாக கையகப்படுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iii) அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-19

கேட்டவர்

கௌரவ சமிந்த லலித் குமார, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-19

பதில் அளித்தார்

கௌரவ (பேராசிரியர்) ஏ.எச்.எம்.எச். அபயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks