logo

E   |   සි   |  

 திகதி: 2026-08-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

2172/2026: Vacancies in Technological service in Sri Lanka

2172/2026
கௌரவ ஜே.சீ. அலவத்துவல,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கைத் தொழில்நுட்பச் சேவையின் கீழ் உள்ளடங்கும் தொழில்கள் யாவை என்பதையும்;
(ii) அச்சேவையில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) தற்போது நிலவும் வெற்றிடங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iv) மேற்படி வெற்றிடங்கள் அரச நிறுவனங்களின் செயற்பாடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) ஆமெனின், வெற்றிடங்களை நிரப்புவதற்கும் தொழில்சார் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-18

கேட்டவர்

கௌரவ ஜே.சீ. அலவத்துவல, பா.உ.

அமைச்சு

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks