பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2135/2026
கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பண்டாரகம, மில்லெனிய மற்றும் ஹொரனை பிரதேச செயலகப் பிரிவுகளில் காணப்படும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குரிய காணிகளின் அளவு யாதென்பதையும்;
(ii) மேற்படி காணிகளுள் தற்போது வரை வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாதென்பதையும்;
(iii) காணிபெறுநர்களின் பெயர்ப் பட்டியலொன்றை வழங்க முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) ஆணைக்குழுவுக்குரிய காணிகளுள் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்டு வரும் காணிகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;
(ii) ஆமெனில், அக்காணிகளின் அளவு யாதென்பதையும்;
(iii) அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) மேற்படி ஒவ்வொரு பிரதேசச் செயலகப் பிரிவிலும்;
(i) குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்குரிய காணிகளின் அளவு மற்றும் அதற்காக வருடாந்தம் அறவிடப்படும் குத்தகைக் கட்டணம்;
(ii) குத்தகை ஒப்பந்தம் காணப்படுகின்றபோதும் குத்தகைக் கட்டணம் அறவிடப்படாத காணிகளின் அளவு;
(iii) குத்தகைக்கு வழங்கக் கூடிய பிணக்கற்ற காணிகளின் அளவு;
வெவ்வேறாக யாதென்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-05
கேட்டவர்
கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks