பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2128/2026
கௌரவ சுஜீவ திசாநாயக்க,— இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை தற்போது வரை பங்கேற்றுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) தற்போது இலங்கையிலுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்கு பொருத்தமான மைதானங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) குருநாகல் மாவட்டத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்கு பொருத்தமான மைதானங்கள் உள்ளனவா என்பதையும்;
(ii) மேற்படி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள வீரர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி வீரர்களின் பெயர்களும், இவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய பாடசாலைகளும் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) டீ. பி. வெலகெதர மைதானம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்கு பொருத்தமானதா என்பதையும்;
(ii) மேற்படி விளையாட்டரங்கில் நடாத்தப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) மேற்படி விளையாட்டரங்கில் சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்று இறுதியாக நடாத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
(iv) மேற்படி விளையாட்டரங்கு எந்த நிறுவனத்திற்கு சொந்தமானதென்பதையும்;
(v) தற்போது மேற்படி விளையாட்டரங்கு வேறு நிறுவனமொன்றிற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(vi) ஆமெனில், இந்த உரிமை மாற்றம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்பதையும்;
அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-19
கேட்டவர்
கௌரவ சுஜீவ திசாநாயக்க, பா.உ.
அமைச்சு
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks