E   |   සි   |  

 திகதி: 2026-07-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

2121/2026: Eligibility of the incumbent Secretary to the Ministry of Finance

2121/2026

கௌரவ அஜித் பி. பெரேரா,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தற்போதைய   செயலாளரின் பெயர் யாதென்பதையும்;

           (ii)    இவர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;

           (iii)   அந்த பதவியை வகிப்பதற்கு இவருக்குள்ள கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) அமைச்சின் தற்போதைய செயலாளர் —

(i) ஓர் இலங்கைப் பிரஜையா என்பதையும்;

(ii) இலங்கை குடியுரிமையை பிறப்பின் மூலம் அல்லது பதிவு செய்ததன் மூலம் பெற்றாரா என்பதையும்;

(iii) அவுஸ்திரேலியப் பிரஜையாக இருந்துள்ளாரா என்பதையும்;

(iv) இரட்டைக் குடியுரிமையை கொண்டிருந்தாரா என்பதையும்;

(v) அவுஸ்திரேலியக் குடியுரிமையை துறந்த திகதி யாதென்பதையும்;

(vi) அவுஸ்திரேலியக் குடியுரிமையை துறந்த பின்னர் மீள இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளாரா என்பதையும்;

(vii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவருக்கு அமைச்சு செயலாளர் பதவியை வகிக்க முடியாதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2026-07-10

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks