E   |   සි   |  

 திகதி: 2026-07-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

2120/2026: Policy decision to increase the retirement age of Supreme Court Judges

2120/2026
கௌரவ அஜித் பி. பெரேரா,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறுவதற்கான வயதை 65 இலிருந்து 67 வரையும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறுவதற்கான வயதை 63 இலிருந்து 65 வரையும் நீடிப்பதற்கு அரசாங்கம் கொள்கைத் தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதா;
(ii) ஆமெனில், அதற்கான அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் கொள்கைசார் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா;
(iii) அமைச்சர் அல்லது அமைச்சின் செயலாளர், அவ்வாறான சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாரா;
(iv) உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறுவதற்கான வயதை நீடிப்பதை நியாயப்படுத்துவதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-09

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks