பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2117/2026
கௌரவ ரவி கருணாநாயக்க, — நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 'ஜய இசுர' நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அதன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தப் பெறுமதி யாதென்பதையும்;
(ii) 4%-5% சலுகை வட்டி மானியம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) அவ்வாறாயின், இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நன்மை பெற்றுக்கொண்ட பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் நன்மைகள் யாவை என்பதையும்;
(iv) பங்குபற்றுகின்ற வர்த்தக வங்கிகள் இந்த நிகழ்ச்சித்திட்டத்துடன் இணங்கிச் செயற்பட்டனவா என்பதையும், அமைச்சிலிருந்து பெறப்படவேண்டிய உரிய வட்டி மானியத்தைப் பெற்றுக்கொண்டனவா என்பதையும்;
(v) ஏனைய வர்த்தக வங்கிகள் ஊடாகத் தமது கடன்களைச் செலுத்தி முடித்த கடனாளிகள் தொடர்ந்தும் இந்த மானியத்தைப் பெறுவதற்குத் தகைமையுடையோராயிருந்தார்களா என்பதையும்;
(vi) அவ்வாறாயின், அது வழங்கப்பட்டதா என்பதையும்;
(vii) இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் குறிக்கோள்களுக்கும், இலக்கு வைக்கப்பட்ட பயனாளிகளால் பெற்றுக்கொள்ளப்பட்ட நன்மைகளுக்கும் இடையே ஏதேனும் வேறுபாடுகள் இருப்பதை அவர் அறிவாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2019 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சம்பத் வங்கி ஊடாக அங்கீகாரங்கள் வழங்கப்பட்டனவா என்பதையும்;
(ii) அவ்வாறாயின், அவற்றின் எண்ணிக்கை மற்றும் பெறுமதி யாதென்பதையும்;
(iii) வரையறுக்கப்பட்ட க்ளென்றொக் (பிறைவற்) லிமிட். நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நிலை மற்றும், அது அங்கீகரிக்கப்பட்டிருப்பின், அதற்குரிய நன்மைகளை வழங்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்?
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-09
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks