E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

2116/2026: Statistics on unemployment among persons with Disabilities

2116/2026
கௌரவ சுகத் வசந்த த சில்வா,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) 2024 ஆம் ஆண்டிற்கான தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கைப்படி மாற்றுத்திறனாளிகள் சனத்தொகை, ஒவ்வொரு மாற்றுத்திறன் வாரியாக எண்ணிக்கை அடிப்படையிலும் சதவீத அடிப்படையிலும் வெவ்வேறாக யாது;
(ii) மேற்படி சனத்தொகையில், ஊழியப் படையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை யாது;
(iii) மேற்படி எண்ணிக்கை, பாலினம் மற்றும் மாற்றுத்திறன் வகை வாரியாக வெவ்வேறாக யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தற்போது அரச துறை மற்றும் தனியார் துறை தொழில்களில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, வெவ்வேறாக யாது?
(ii) 2026ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட அரச சேவையில் 3% என்ற அனுமதிப்பங்கை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(iii) மாற்றுதிறனாளிகளில் வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கையும் சதவீதமும் வெவ்வேறாக யாது;
(iv) மேற்படி மாற்றுத்திறனாளிகளை அரசதுறை மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் ஈடுபடுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-18

கேட்டவர்

கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks