E   |   සි   |  

 திகதி: 2026-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2115/2026: தொழிற்பயிற்சி நிறுவனங்கள்: ஊனமுற்றோருக்கான கற்கைநெறிகளும் வசதிகளும்

2115/2026
கௌரவ சுகத் வசந்த த சில்வா,— பிரதம அமைச்சரும், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) இலங்கையில் இயங்கு நிலையிலுள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களின் எண்ணிக்கை யாது;
(ii) மேற்படி நிறுவனங்களில் நடாத்தப்படும் கற்கைநெறிகள் யாவை;
(iii) மேற்படி கற்கைநெறிகளுக்கு கடந்த ஆண்டில் சேர்த்துக்கொள்ளப்பட்ட வலிமையிழந்த பயிலுநர்களின் எண்ணிக்கை, வலிமையிழப்பு வகை வாரியாக வெவ்வேறாக யாது;
(iv) மேற்படி கற்கைநெறிகளைத் தொடர்வதற்கு, வலிமையிழந்த பயிலுநர்களுக்கு பௌதீக ரீதியான அணுகல் மற்றும் தொடர்பாடல் வசதி செய்துகொடுக்கப் பட்டுள்ளதா;
(v) பயிலுநர்களை சேர்த்துக்கொள்வதற்குத் தேவையான தகைமைகளை வலிமையிழப்பு நிலை அல்லது அனைவரையும் உள்வாங்கிக் கொள்வதில் உள்ள தடங்கல்கள் காரணமாக பூர்த்திசெய்ய முடியாத பயிலுநர்களுக்கு கற்கைநெறிகளில் சேர்வதற்கு விசேட வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தொழிற்பயிற்சி நிறுவனங்களின் பயிற்றுநர்களுக்கு வலிமையிழந்த சமுதாயத்துடன் செயலாற்றுவதற்குத் தேவையான விசேட திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளனவா?
(ii) பயிலுநர்களுக்கு அண்மித்த இடங்களில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிறுவனத்தில் தாம் விரும்பும் கற்கைநெறியைத் தொடர்வதற்குத் தேவைப்படும், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையிழந்தவர்களுக்கு நேயமுள்ள, நிறுவனக் கட்டமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதன் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதா;
(iii) ஆமெனில், அதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளும் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-04

கேட்டவர்

கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-04

பதில் அளித்தார்

கௌரவ நலின் ஹேவகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks