E   |   සි   |  

 திகதி: 2026-08-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2113/2026: Inadequacy of teaching staff in Estate sector schools

2113/2026
கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள மேற்படி ஆட்சேர்ப்புக்களை மீள ஆரம்பிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
(iv) தோட்டப் பாடசாலைகளுக்கு ஆசிரிய உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தல் தொடர்பில் மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின், அவை யாவையென்பதையும்;
(v) தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எண்ணக்கருவின் பிரகாரம், பெயர்ப்பலகைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தோட்டப் பாடசாலைகள் தேசிய கல்வி முறைமைக்குள் உள்ளீர்க்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-19

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks