E   |   සි   |  

 திகதி: 2026-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2111/2026: எச்.ஜீ. கவீஷ கீதாஞ்சன அமரசிங்க: உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படாமை

2111/2026

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக்  கேட்பதற்கு,— 

(அ)     (i)     2024.03.28 ஆம் திகதிய, 2378 ஆம் இலக்க வர்த்தமானிப் பத்திரிகைக்கு அமைய ‘உப பொலிஸ் பரிசோதகர்’ பதவிக்கு விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன என்பதையும்;

(ii) மேற்படி விண்ணப்பங்களில் தேர்வுக்காக நூறு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதையும்;

(iii) எச்.ஜீ. கவீஷ கீதாஞ்சன அமரசிங்க என்பவர், அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களில் உள்ளடங்குவதாகவும் பயிற்சிக்கு வரும் போது அவர் எடுத்துவர வேண்டிய பொருட்கள் பற்றியும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும்;

(iv) 2026.04.18ஆம் திகதி மற்றைய தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவருக்கு அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி அ (iv) இற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

(ii) அவருக்கு இழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் அநீதி தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-04

கேட்டவர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-04

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks