E   |   සි   |  

 திகதி: 2026-08-04   பதிலளிக்கப்பட்டவைகள் 

2110/2026: சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனை: வரி வருமானம்

2110/2026
கௌரவ கஞ்சன வெலிப்பிட்டிய,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பில் ஆண்டுதோறும் பாரியதொரு வரித்தொகையை அரசாங்கம் அறவிடுகிறது என்பதை அறிவாரா?
(ii) ஆமெனில், கடந்த 03 ஆண்டுகளில் சிகரெட் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் மூலம் அறவிடப்பட்ட தொகை, ஆண்டுவாரியாக வெவ்வேறாக யாது;
(iii) சட்டரீதியாக சிகரெட் உற்பத்தி மற்றும் விற்பனை மீது வரி அறவிடப்படுகின்ற போதிலும், சிகரெட்டுகள் சட்டவிரோதமான முறைகளில் இறக்குமதிசெய்து விற்பனை செய்யப்படுவதை அறிவாரா;
(iv) ஆமெனில், சட்டவிரோதமான முறைகளில் சிகரெட் இறக்குமதி செய்யப்படுவதையும் விற்பனை செய்யப்படுவதையும் கட்டுப்படுத்துவதற்கு தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(v) சட்டவிரோதமாக சிகரெட் வியாபாரத்தில் ஈடுபடும் ஆட்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆவண செய்யப்படுமா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-04

கேட்டவர்

கௌரவ கஞ்சன வெலிப்பிட்டிய, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-04

பதில் அளித்தார்

கௌரவ நிசான்த ஜயவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks