logo

E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

2107/2026: Gazettal of the Elephant Corridor between the Udawalawe and Lunugamwehera National Parks

2107/2026

கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி,— சுற்றாடல் அமைச்சரைக்  கேட்பதற்கு,— 

(அ)     (i)     உடவளவை தேசிய பூங்காவிற்கும் லுணுகம்வெஹெர தேசிய பூங்காவிற்கும் இடையில் உள்ள யானை வழித்தடம், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதி யாது;

           (ii)    மேற்படி வழித்தடத்தின் இருமருங்கிலும் பாதுகாப்பு மின்சார வேலி அமைக்கப்பட்ட திகதி யாது;

(iii) மேற்படி மின்சார வேலியை அமைப்பதன் முக்கிய நோக்கம் யாது;

(iv) யானை பாதுகாப்பு வேலியை அமைப்பதற்குச் செலவிடப்பட்டுள்ள மொத்தத் தொகை எவ்வளவு;

(v) 2018 ஆம் ஆண்டில் யானை பாதுகாப்பு வேலி இருக்கும் போதே அதிகாலை வேளையில் கிராமத்துக்குள் புகுந்த ஒரு யானை பாடசாலை மாணவரொருவரைக் கொன்றுள்ளதை அறிவாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) யானை வழித்தடத்தின் இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் பலஹருவ கிராமம் உள்ளடங்கும் பகுதியில் பிரதான மின்சார வேலி தற்போது செயலிழந்துள்ளதென்பதை அறிவாரா?

(ii) மேற்படி மின்சார வேலியை அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதா;

(iii) ஆமெனில், அந்த முடிவு எடுக்கப்பட்ட திகதி மற்றும் அதன் நோக்கம் யாது;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2026-08-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி, பா.உ.

அமைச்சு

சுற்றாடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks