பார்க்க

E   |   සි   |  

 திகதி: 2026-08-18   பதிலளிக்கப்பட்டவைகள் 

2094/2026: கொழும்பு மாவட்டத்தில் பராமரிப்போ, வாழ்வாதாரமோ இல்லாத முதியவர்கள்: நலன்புரி மற்றும் பாதுகாப்பு

2094/2026
கௌரவ தேவானந்த சுரவீர,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) (i) கொழும்பு மாவட்டத்தில் வாடகை வீடுகளில் வசிக்கும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நிலையான வாழ்வாதாரம் இல்லாத முதியோர்களைக் கண்டறிவதற்கான முறையொன்று உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், இதுவரை அடையாளம் காணப்பட்ட அத்தகைய முதியோர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) அம்முதியோர்களின் பாதுகாப்பிற்காக கொழும்பு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அந்நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கும் உதவி யாதென்பதையும்;
(v) முதியோர்களின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையானது ஒட்டுமொத்தமாக ஆண்டுதோறும் அதிகரித்து வரும் போக்கு காணப்படுவதை அறிவாரா என்பதையும்;
(vi) முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக முன்மொழியப்பட்ட எதிர்காலத் திட்டங்கள் உள்ளனவா என்பதையும்;
(vii) ஆமெனில், அந்தத் திட்டங்கள் யாவையென்பதையும்;
அவர் குறிப்ப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-08-18

கேட்டவர்

கௌரவ தேவானந்த சுரவீர, பா.உ.

அமைச்சு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

பதில் சிங்கள மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது.

பதில் தேதி

2026-08-18

பதில் அளித்தார்

கௌரவ வசந்த பியதிஸ்ஸ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks