பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2083/2026
கௌரவ துரைராசா ரவிகரன்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் மின்சார வசதியைக் கொண்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாகவும்;
(ii) மின்சார வசதி அற்றதும் மின்சார வசதி தேவைப்படுகின்றதுமான குடியிருப்புகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாகவும்;
(iii) முல்லைத் தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் மின்சார வசதி உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை பிரதேச செயலாளர் பிரிவு வாரியாகவும்;
(iv) மேற்படி மாவட்டங்களில் மின்சார வசதி அற்றதும் மின்சார வசதி தேவைப்படுகின்றதுமான குடியிருப்புகளின் எண்ணிக்கை பிரதேச செயலாளர் பிரிவு வாரியாகவும்;
வெவ்வேறாக யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த 05 வருட காலத்தினுள் மேற்படி அ(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில், புதிதாக மின்சார வசதி வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை;
(ii) மேற்படி மாவட்டங்களில் குறுஞ்செய்திச் சேவை (SMS) மூலம் மின்சாரக் கட்டணப் பட்டியல்களைப் பெற்றுக்கொள்வதற்கு பதிவு செய்துகொண்டுள்ள மற்றும் பதிவு செய்யாதுள்ள மின் பாவனையாளர்களின் எண்ணிக்கை;
வெவ்வேறாக யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) 2026 ஆம் ஆண்டில் மேற்படி மாவட்டங்களில் மின்சார வசதிகளை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்கள் மற்றும் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஏற்பாடுகள் யாவையென்பதையும்;
(ii) அம்மாவட்டங்களில் கிராமிய மற்றும் கஷ்டப் பிரதேசங்களுக்கான மின் இணைப்புகளை விரிவுபடுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித் திட்டங்கள் யாவை என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-07-24
கேட்டவர்
கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ.
அமைச்சு
வலுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks