E   |   සි   |  

 திகதி: 2026-07-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

2082/2026: Power interuptions and Solar panel installation in Northern Province

2082/2026
கௌரவ துரைராசா ரவிகரன்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 
(அ) முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 2026 ஆம் ஆண்டின் முதல் 05 மாதங்களில் —
(i) பதிவாகிய மின் தடங்கல்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) ஒவ்வொரு மின் தடங்களும் நிலவிய காலவரையறை யாதென்பதையும்;
(iii) இதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் —
(i) சூரிய வலுசக்தி கட்டமைப்பு பொருத்தப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை பிரதேச செயலக வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) மேற்படி கட்டமைப்பை பொருத்துவதற்கு வழங்கப்படும் நிதயுதவி, கடன் மற்றும் ஊக்குவிப்புத்தொகை தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;
(iii) 2026 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொடர்பான விபரங்கள் யாவை என்பதையும்;
(iv) தொடர்ச்சியான மின்விநியோகத்திற்கு ஏற்படும் தடங்கல்கள் காரணமாக கல்வி, சிறு கைத்தொழில் மற்றும் விவசாயத் துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மதிப்பிடப்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) மின் இணைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவுத்தொகை அல்லது நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றிய விபரங்கள் யாவை என்பதையும்;
(vi) மேற்படி நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயனடைந்துள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-07-24

கேட்டவர்

கௌரவ துரைராசா ரவிகரன், பா.உ.

அமைச்சு

வலுசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks