பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2055/2026
கௌரவ சட்டத்தரணி சரத் குமார,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ள 'மரகல' மலைத்தொடர், சுற்றாடல் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அதன் நிலப்பரப்பு யாதென்பதையும்;
(iii) மேற்படி சுற்றாடல் பாதுகாப்பு வலயத்திற்குரிய எல்லைகளைக் குறிக்கும் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) மேற்படி மலைத்தொடரின் ஒதுக்கப்பட்ட எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் குடியேற்றங்கள் அல்லது அனுமதியற்ற பயிர்ச்செய்கை நிலங்களை நடாத்திச் செல்வது குறித்து அறிக்கையிடப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) ஆமெனில், அனுமதியற்ற குடியிருப்பாளர்களை அகற்றுவதற்கும் ஒதுக்கப்பட்ட நிலத்தைப் பாதுகாப்பதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மரகல மலைத்தொடரைச் சார்ந்த பிரதேசம் சுற்றாடல் பாதுகாப்பு வலயமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) அவ்வாறு பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னர், காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தினால் அது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட நிலப்பரப்பிற்குள் தனியார் காணிகளாக நிர்ணயம் செய்யப்பட்ட காணிகள் எவையேனும் உள்ளனவா என்பதையும்;
(iv) சுற்றாடல் பாதுகாப்பு வலயமொன்றாகப் பிரகடனப்படுத்தப்பட்டதன் காரணமாக, நிர்ணயம் செய்யப்பட்ட தனியார் காணிகளைப் பயன்படுத்துவதற்குத் தடைகள் ஏற்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-19
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சரத் குமார, பா.உ.
அமைச்சு
சுற்றாடல்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks