பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2042/2026
லெப்டினன்ட் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் யாது;
(ii) 'ரக்னா பாதுகாப்பு லங்கா கோபுரத் திட்டம்' எனும் பெயரில் வணிக அலுவலகத் தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதா;
(iii) அவ்வாறாயின், அது ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு மற்றும் அதற்கு அனுமதி அளித்தவர்கள் யாவர்;
(iv) அத்திட்டத்திற்காக முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை, முதலீட்டுத் துறைகள் மற்றும் நிதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விதம் யாது;
(v) முதலீடு செய்யும் போது சந்தை ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(vi) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கருத்திட்டத்தின் நிதியைச் செலவிடுவது தொடர்பில் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதா;
(ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
(iii) பெறுகை மற்றும் நிதி வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா;
(iv) இன்றேல், அத்துறைகள் யாவை;
(v) ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுகள் குறித்த விபரங்களைச் சமர்ப்பிப்பாரா;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) கருத்திட்டத்திற்கான கிரயம் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்களை ஒப்பிடும் போது நிதி ரீதியான நட்டம் ஏற்பட்டுள்ளதா;
(ii) அவ்வாறாயின், அந்த நிதித்தொகை யாது;
(iii) இது நிறுவனத்தினால் தாங்கிக்கொள்ளக்கூடிய மட்டத்தில் உள்ளதா;
(iv) கருத்திட்டத்திற்கான மேற்பார்வை உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளாரா;
(v) இக்கருத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா;
(vi) அதன் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா;
(vii) இத்திட்டம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-06-26
கேட்டவர்
கௌரவ லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks