பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2027/2026
கௌரவ (கலாநிதி) நந்தன மில்லகல,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கேகாலை மாவட்டத்தில், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி மாவட்டத்தில் முதலாவது கூட்டுறவுச் சங்கம் பதிவுசெய்யப்பட்ட ஆண்டு யாதென்பதையும்;
(iii) மேற்படி கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சொந்தமான கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அவற்றுள் தற்போது செயற்படும் நிலையிலுள்ள மற்றும் செயற்படாத நிலையிலுள்ள கூட்டுறவுக் கிராமிய வங்கிகளும் கடைகளும் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) புளத்கொஹுபிட்டிய மற்றும் யட்டியாந்தோட்டை கூட்டுறவுச் சங்கங்கள் பதிவுசெய்யப்பட்ட ஆண்டு வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) மேற்படி சங்கங்களுக்கு உரிய கூட்டுறவு சங்கக் கடைகள், கிராமிய வங்கிகள் மற்றும் கோப்சிட்டிகளது எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) தற்போது மேற்படி சங்கங்களுக்குச் சொந்தமான செயற்படும் மற்றும் செயற்படாத நிலையிலுள்ள கூட்டுறவுச் சங்கக் கடைகள் யாவையென்பதையும்;
(iv) மேற்படி கடைகள் செயற்படாத நிலைக்கு தள்ளப்பட்டமைக்கான காரணிகள் யாவையென்பதையும்;
(v) கடந்த 10 வருட காலப்பகுதியில் மேற்படி கூட்டுறவுச் சங்கங்களின் வருடாந்த கணக்காய்வுகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
(vi) இன்றேல், மேற்படி விடயம் தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-08-18
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) நந்தன மில்லகல, பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks