E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

2014/2026: Decision to closure of Kithulegoda Junior School

கௌரவ அஜித் பி. பெரேரா,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பரகொட, கிதுலகொட கனிஷ்ட வித்தியாலயத்தை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) மேற்படி பாடசாலை தாபிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்;
(iii) 2015 தொடக்கம் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள், மேற்படி பாடசாலையில் கல்வி பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) பாடசாலையை மூடுகின்ற போது, அங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பாடசாலையில் சேரவிருக்கும் மாணவர்களுக்கும் வேறு பாடசாலைகளுக்குச் செல்வதற்குள்ள தூரம் மற்றும் போக்குவரத்து அசௌகரியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதா என்பதையும்;
(v) மேற்படி பாடசாலையிலிருந்து மிக அருகிலுள்ள பாடசாலைக்கு உள்ள தூரம் எவ்வளவு என்பதையும்;
(vi) அதிக மழை மற்றும் வெள்ள நிலைமைகளின் போது பரகொட மற்றும் கித்துலகொட பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு மாற்றுப் பாடசாலைகளுக்குச் செல்வதிலுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதா என்பதையும்;
(vii) பாடசாலை தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானம் யாதென்பதையும்;
(viii) பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks