பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ அஜித் பி. பெரேரா,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1949 ஆம் ஆண்டின் நாணய விதிச் சட்டத்தினால் நிறுவப்பட்ட பின்னர் சட்டங்கள் மற்றம் திருத்தங்கள் மூலம் விசேட பணிகள் பொறுப்பளிக்கப்பட்டு செயற்பட்டு வந்த இலங்கை மத்திய வங்கியின் நிறுவன ரீதியான இருப்பு, 2023 ஆம் ஆண்டின் மத்திய வங்கிச் சட்டத்தின் கீழும் தொடர்ச்சியாக செயற்படுகின்றதென்பதையும்;
(ii) மத்திய வங்கிச் சட்டத்தின் XIX ஆம் பகுதிக்கமைய 2023.09.15ஆம் திகதிக்கு முன்னதாக நாணய விதிச் சட்டத்தின் கீழ் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் நாணயச் சபைக்கு அளிக்கப்பட்ட உரிமைகளையும் பிணைப்புகள்/பொறுப்புகளையும் மத்திய வங்கி அங்கீகரிக்க வேண்டுமென்பதையும்;
(iii) நாணய விதிச் சட்டம் அல்லது வேறு ஏதேனும் சட்டத்தின் கீழ் நாணயச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட / வெளியிடப்பட்ட நடவடிக்கைகள், உத்தரவுகள் அல்லது தீர்மானங்கள் மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட /வெளியிடப்பட்டவையாக கருதப்படல் வேண்டுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்கின்றாரா?
(ஆ) (i) நாணயச் சபையினால் 2023.09.15 ஆம் திகதிக்கு முன்னதாக ஓய்வளிக்கப்பட்ட ஓய்வூதியதாரர்களின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் சமகால ஓய்வூதியத் திருத்தக் கொள்கைக்குரிய பொறுப்புகளை நிறைவேற்றுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களையும் நிறுவன கொள்கைகளையும் ஆளும் சபை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமா என்பதையும்;
(ii) இன்றேல், ஓய்வூதியதாரர்களை உள்வாங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-05-19
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks