logo

01

E   |   සි   |  

 திகதி: 2026-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1990/2026: Maximum retails price of Rice

1990/2026

கௌரவ திலிண சமரகோன்,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)     (i)     பண்டிகை காலத்தில் போதியளவு அரிசிக் கையிருப்புகளை சந்தைக்கு விடுவிக்கும் ஆற்றலுள்ளதா என்பதையும்;            

           (ii)    அனைத்து அரிசி வகைகளின் கட்டுப்பாட்டு விலைகள், அரிசி வகைகளின் வாரியாக வெவ்வேறாக யாவை என்பதையும்; 

(iii)​ வரையறுக்கப்பட்ட லங்கா சதொச நிறுவனம் மூலம் அரிசியை விநியோகிப்பதற்கு வகுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம்  யாதென்பதையும்;

(iv) இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் யாவையென்பதையும்; 

(v) மேற்படி அரிசி வகைகளின் நடப்பு விலைகள், அரிசி வகைகளின் வாரியாக வெவ்வேறாக யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் போதியளவு களஞ்சியப்படுத்தப் பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) மேற்படி உணவுப்பொருட்கள், தனியார் துறையால் மட்டும் இறக்குமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;

(iii) இன்றேல், அரச துறை அதில் தலையீடு செய்யும் விதம் யாதென்பதையும்;

(iv) அரிசி மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதில் நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை போதியளவு தலையீடு செய்கின்றதா என்பதையும்;

(v) மேற்படி அதிகாரசபை, விலைக் கட்டுப்பாட்டில் தலையீடுசெய்யும் விதம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2026-05-22

கேட்டவர்

கௌரவ திலிண சமரகோன், பா.உ.

அமைச்சு

வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks