01

E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1988/2026: Establishment Irrigation Training Institute at Galgamuwa

கௌரவ சந்தன தென்னகோன்,— கமத்தொழில், கால்நடை வளங்கள்,  காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)   (i)      கல்கமுவ நீர்ப்பாசன பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு யாது;

          (ii)     அந்த நிறுவனத்தை நிறுவியதன் நோக்கங்கள் யாவை;

          (iii)    அந்த நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு யாது;

          (iv)    தற்போது அந்த நிலப்பரப்பினுள் உள்ள கட்டிடங்களின் எண்ணிக்கை யாது;

 (v) தற்போது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை யாது;

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) மேற்படி நிறுவனத்தில் நடாத்தப்படும் பாடநெறிகள் யாவை;

(ii) அந்த நிறுவனத்திற்கு முதன்முதலாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆண்டு யாது;

(iii) அந்த மாணவர்களின் எண்ணிக்கை யாது;

(iv) இதுவரையில் அந்தப் பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை யாது;

(v) அந்தப் பாடநெறிகளுக்கு கடைசியாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆண்டு யாது;

(vi) அந்தப் பாடநெறிகளுக்கு நிகரான பாடநெறிகளை நடாத்தும் அரச அல்லது தனியார் நிறுவனங்கள் உள்ளனவா;

(vii) அவ்வாறாயின், அவை யாவை;

என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?


 

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ சந்தன தென்னகோன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks