பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ சுகத் வசந்த த சில்வா,— மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் வலதுகுறைந்த பிள்ளைகளில், 3 தொடக்கம் 5 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) இவர்களில் முன்பள்ளிகளுக்குச் செல்பவர்களின் சதவீதம் யாதென்பதையும்;
(iii) அந்தப் பிள்ளைகளின் முன் பிள்ளைப்பருவ அபிவிருத்திக்காக சமமானதும் நியாயமானதுமான வாய்ப்புகளை வழங்குவதற்கு முறையானதொரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(iv) குறைந்த வருமானத்தை ஈட்டும் குடும்ப அலகுகளில் உள்ள மாற்றுத்திறனுள்ள பிள்ளைகளை முன்பள்ளிக் கல்வியின்பால் ஆற்றுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(v) அரசாங்க மற்றும் தனியார் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் மாற்றுத்திறனுள்ள பிள்ளைகளுக்கு முறையான வசதிகளும் சேவைகளும் வழங்கப்படுகின்றனவா என்பதையும்;
(vi) அவ்வாறாயின், அத்தகைய சேவைகளும் வசதிகளும் யாவை என்பதையும்;
(vii) மாற்றுத்திறனுள்ள பிள்ளைகளை முன்பள்ளிகளில் அனுமதிப்பதற்கென வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டிகளும் சுற்றறிக்கைகளும் யாவை என்பதையும்;
(viii) முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, சிறப்புக் கல்விக்கான தேவையுடைய பிள்ளைகளுடன் செயற்படுவதற்காக வழங்கப்படுகின்ற பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-05-19
கேட்டவர்
கௌரவ சுகத் வசந்த த சில்வா, பா.உ.
அமைச்சு
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks