E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1974/2026: Total extent of Land under the Mahaweli Authority

கௌரவ ரவி கருணாநாயக்க,— கமத்தொழில், கால்நடைவளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)   (i)      இலங்கை மகாவலி அதிகாரசபைக் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பாராதீனப்படுத்தப்பட்ட காணிகளின் மொத்த விஸ்தீரணம் எவ்வளவு என்பதையும் தெளிவான காணி உறுதிப்பத்திரங்கள் இன்றி எஞ்சியுள்ள பயனாளிக் குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) 2015 ஆம் ஆண்டு முதல் வர்த்தகப் பயன்பாட்டிற்காக அல்லது கைத்தொழில் பயன்பாட்டிற்காக மாற்றப்பட்ட, குத்தகைக்கு வழங்கப்பட்ட காணித் துண்டுகள் குறித்தும் அல்லது மீளஒதுக்கீடு செய்யப்பட்ட காணித் துண்டுகள் குறித்தும், இதற்காகப் பின்பற்றப்பட்ட தெரிவடிப்படைகள் என்ன என்பதையும் அத்தகைய மாற்றங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய அதிகார அமைப்பு எது என்பதையும்;

(iii) மகாவலிக் காணிகளை முறையற்ற விதத்தில் ஆக்கிரமித்தமை அல்லது அக்காணிகளின் இரண்டாம் நிலைக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்ற சந்தர்ப்பங்கள் உள்ளனவா என்பதையும்;

(iv) அவ்வாறெனில், எடுக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(v) காணி டிஜிட்டல்மயமாக்கல், புவியியல் தகவல் முறைமை மூலம் வரைபடமாக்கல் மற்றும் பாதுகாப்பான காணி உரிமப் பத்திரங்களை வழங்குதல் என்பவற்றின் தற்போதைய நிலை என்ன என்பதையும்;

(vi) நீண்டகாலக் குடியிருப்பாளர்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கும் காணி ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் சட்டவாக்க மறுசீராக்கல்களை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்கின்றதா என்பதையும்;

(vii) வினைத்திறனான பொருளாதாரச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படாதுள்ள காணிகளின் விஸ்தீரணம் மற்றும் அமைவிடம் எவை என்பதையும்;

(viii) கடந்த 10 வருடங்கள் ஒவ்வொன்றுக்குமாக மகாவலிக் கருத்திட்டத்தின் பொருளாதார வருவாய் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks