பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015-2022 மற்றும் 2022 முதல் இன்று வரையிலான காலப்பகுதிகளின் போது வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையினையும் மொத்த வருவாயினையும் ஒவ்வொரு ஆண்டுக்கும் வெவ்வேறாகவும்;
(ii) இந்த 02 காலப்பகுதியினுள்ளும் ஒவ்வொரு ஆண்டுக்குமான வருகையினை நாடுகள் ரீதியாக வெவ்வேறாகவும்;
(iii) 2015-2022 காலப்பகுதியினுள் முதன்மையான 05 மூலச் சந்தைகள் யாவை என்பதையும்;
(iv) 2022 முதல் இன்று வரையிலான காலப்பகுதியினுள் மேற்குறிப்பிட்ட சந்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதையும்;
(v) 2022 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அடையாளம் காணப்பட்ட புதிய அல்லது வளர்ந்துவரும் சந்தைகள் மற்றும் அவற்றின் சதவீத வளர்ச்சி யாவை என்பதையும்;
(vi) மேற்குறிப்பிட்ட காலப்பகுதிகளிலும் சுற்றுலாப் பயணியொருவரின் சராசரி செலவினம் மற்றும் தங்கும் காலம் யாவை என்பதையும்;
(vii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதிகளிலும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த விளம்பரச் செலவினம் மற்றும் அதன் அளவிடக்கூடிய பெறுபேறுகள் யாவை என்பதையும்;
(viii) குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தினுள் வெவ்வேறாக உள்வாங்க எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் யாவை என்பதையும்;
(ix) கடந்த 05 ஆண்டுகளில் சுற்றுலாத்துறையிலிருந்து அரசாங்கத்தினால் ஈட்டப்பட்ட மதிப்பிடப்பட்ட வரி வருமானம் ஒவ்வொரு ஆண்டுக்கும் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2026-05-19
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks