E   |   සි   |  

 திகதி: 2026-05-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1972/2026: Assessment of national housing deficit

கௌரவ ரவி கருணாநாயக்க,— வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ)    (i)      2026 ஆம் ஆண்டின் போதுள்ளவாறாக, குறைந்த வருமானம் கொண்ட, நடுத்தர வருமானமுடைய, கிராமிய, பெருந்தோட்ட, மற்றும் சேவைகள் முறையாகக் கிட்டாத நகர்ப்புறம் என்ற ரீதியில் வேறாக்கப்பட்ட, உத்தியோகபூர்வ ரீதியாக மதிப்பிடப்பட்ட, தேசிய வீடமைப்புப் பற்றாக்குறையினை வெவ்வேறாகவும்;

(ii) 2026-2029 காலப்பகுதிக்காக மதிப்பிடப்பட்ட அலகு விநியோக இலக்கினையும், வீட்டு வகையின் அடிப்படையில் அலகொன்றுக்கான மதிப்பிடப்பட்ட சராசரி நிர்மாணிப்புச் செலவினையும்;

(iii) தேசிய இடைநிலையளவுக் குடும்ப வருமானத்தின் கீழ் உள்ள பயனாளிகளின் விகிதாசாரத்தினையும்;

(iv) தற்போதுள்ள அடைமான வீதங்கள், பணவீக்கம் மற்றும் நிர்மாணிப்புச் செலவுகளின் அதிகரிப்பு என்பவற்றுடன் ஒப்பிட்டு வீடொன்றை நிர்மாணிக்கக் கூடியதாக இருக்கும் தன்மை தரநிலைப்படுத்தப்பட்டதா என்பதையும்;

(v) பயனாளர்களின் தெரிவில் பிரயோகிக்கப்பட்ட புறவயமான தகுதித் தெரிவடிப்படையினையும் டிஜிட்டல் சரிபார்ப்பினையும்;

(vi) ஒழுங்கீனங்களின் காரணமாக மீளாய்வு செய்யப்பட்ட, மேன்முறையீடு செய்யப்பட்ட, அல்லது இரத்துச் செய்யப்பட்ட 2024-2025 இன் போதான ஒதுக்கீட்டுத் தீர்மானங்களின் எண்ணிக்கையினையும்;

(vii) அரசியல்மயமாக்கம் மற்றும் இரட்டிப்பு என்பவற்றினைத் தடுப்பதற்காக வெளிப்படைத்தன்மையுடைய, பகிரங்கமாக அணுகத்தக்க பயனாளர் பதிவேடு காணப்படுகின்றதா என்பதையும்;

(viii) நடுத்தர வகுப்பு வீடமைப்புத் திட்டமொன்று அமுல்படுத்தப்படுகின்றதா என்பதையும்;

(ix) அவ்வாறாயின், அதன் அமைவிடம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பூர்த்தியாக்கல் திகதி என்பவற்றினையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2026-05-19

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks